Bigg Boss 7 : சின்னத்திரை ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1 ஆம் தேதி மிகவும் கோலாகலமாக ஆறு மணிக்கு தொடங்கப்பட்டது இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள், அவர்களில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தகா, பிரதீப் ஆண்டனி, மணி சந்திரா, அக்ஷயா உதயகுமார், மாயா கிருஷ்ணன், விசித்ரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மௌன ராகம் 2 சீரியல் பிரபலம் ரவீனா தகாவுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. அதேபோல் மணிச்சந்திரா இந்த சீசனில் டப் போட்டியாளராக இருப்பார் என்று பார்த்தால் ரவீனா பின்னாடியே குட்டி போட்ட பூனை மாதிரி திரிந்து கொண்டிருக்கிறார்.
ரவீனாவை சின்ன பிக் பாஸ் வீட்டிற்கு அனுப்பியும் மணிசந்திராவின் சேட்டை குறைந்த பாடில்லை. . வாக்கப் சாங்ஸ் போட்டவுடன் அனைவரும் ஆடினார்கள் கடைசியில் ரவீனா டங்குன்னு ஏறி மணிச்சந்திரா இடுப்பில் உட்கார்ந்தார் இப்படி சேட்டைகளை ஆரம்பித்து விட்டார்கள் இதற்கு முன்பு கவின் லாஸ்லியா ரொமான்ஸ் விட இந்த சீசனில் அதிக ரொமான்ஸ் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீனா தகா இப்படி சேட்டைக்காரியாக மாறி உள்ளது ரசிகர்களுக்கு ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் சிங்கிள்ஸ் ரசிகர்கள் வைத்தெரிச்சலில் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் ரவீனா கையில் எழுதி மறைமுகமாக மணி – க்கு காட்டுவதும் மணியின் கையை கடித்து விளையாடுவதும் என எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது அதிலும் ஐசுவை அருகிலேயே வைத்துக் கொண்டு மணி கையை கடித்து விளையாடுகிறார் லிப்ஸ்டிக் ஒட்டிக் கொண்டதாக அதை கன்னத்தில் எடுத்து தடவி துடைத்தது எல்லாம் ரொம்ப ஓவர் என நெட்டிசன்கள் காண்டாகிறார்கள்.
அது மட்டும் இல்லாமல் இப்பொழுதெல்லாம் காதலர்கள் கடித்து அந்த இடத்தில் அப்படியே டாட்டு போட்டுக் கொள்கிறார்கள் என ஜொள்ளு பார்ட்டியாகவே மாறிவிட்டார் மணி சந்திரா இவர்களின் அட்டூழியத்திற்கு பிக் பாஸ் ஒரு முடிவு கட்டுவாரா என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.