பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு கோலாகலமாக தொடங்கி உள்ளது. உலக நாயகன் கமலஹாசன் நிகழ்ச்சியை சீரும் சிறப்புமாக தொடங்கியுள்ளார் முதலில் பிக்பாஸ் வீட்டை காண்பித்தார். உள்ளே இரண்டு வீடுகள் இருக்கின்றது இரண்டு வீடுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது சில மாற்றங்கள் தென்படுகின்றன.
மேலும் விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளது. முதலாளாக கூல் சுரேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தார் இவர் கமலிடம் சொன்னது என்னவென்றால் நான் பிக்பாஸ் நிகழ்ச்சி வருவதற்கு முக்கிய காரணம் நடிகர் சிம்பு மற்றும் சந்தானம் தான் என கூறினார். பிக்பாஸ் சீசன் 7 உள்ள போறது ஏழரை என கூல் சுரேஷ் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சுரேஷ் பார்ப்பதற்கு காமெடி பீஸ் ஆக இருந்தாலும் அவருடைய செயல்பாடுகள் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாக தான் இருக்கும் அதனால் பிக்பாஸ் 7 -ல் கூல் சுரேஷை ரசிகர்கள் கவனிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் கூல் சுரேஷின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்போம்..
வீட்டின் உள்ளே போன கூல் சுரேஷ் கேமராவை பார்த்து பேசும் போது நான் தான் முதல் போட்டியாளர் என்ன ஏதாவது டயலாக் பேசி இருப்பேன் ஆனா வெளியில இருக்கிறவங்க எல்லாம் கிண்டல் பண்ணி சிரிச்சிருப்பாங்க அதனாலதான் பேசல என பேசிவிட்டு கூல் சுரேஷ் உள்ளே வருகிறார்.