Bigboss 7 : சினிமாவாக இருந்தாலும் சரி சீரியலாக இருந்தாலும் சரி மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டால் அதை அடுத்தடுத்த பாகங்களாக காண்பிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரானது விஜய் டிவி.
இதில் எப்பொழுதுமே புதுப்புது ரியாலிட்டி ஷோ ஓடும் அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி அமைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றதால் அடுத்தடுத்த சீசன்கள் வருடம் வருடம் நடத்தப்பட்டு வருகிறது அதன்படி பிக்பாஸ் 7 வது சீசனும் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இதை யார் தொகுத்து வழங்கப் போகிறார் போட்டியாளர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வந்த நிலையில் தற்போது அதற்கு விடையும் கிடைத்துள்ளது. உலக நாயகன் கமலஹாசன் தற்பொழுது வெள்ளி திரையில் பல படங்கள் பண்ணி வந்தாலும் பிக்பாஸ் 7 வது சீசனை அவர்தான் தொகுத்து வழங்க உள்ளார் என கூறப்படுகிறது.
போட்டியாளர்கள் யார் என்பதையும் ஒரு ஊடகம் தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த லிஸ்டில் முதலாவதாக இருப்பவர் ஜாக்குலின். இவர் விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு வெள்ளி திரையில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து பப்லு என்கின்ற நடிகர் பிருத்திவிராஜ், கடந்த சீசனில் சிறப்பாக விளையாடிய சீரியல் நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ் இதில் வர வைக்கப்படுவார் என கூறப்படுகிறது. நடிகை ரேகா நாயர், ஓட்டுநர் ஷர்மிளா, நடன இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து இன்னும் உறுதியான தகவல் வெளிவரவில்லை.