Bigg Boss 7 contestant Maya S Krishnan family: விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி இருக்கும் நிலையில் 18 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். இந்த சீசன் மற்ற சீசன்களை விட பல மாற்றங்களுடன் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஆரம்பத்திலேயே பிக் பாஸ் வீடு, ஸ்மால் பாஸ் வீடு என போட்டியாளர்களை இரண்டு குழுவாக பிரித்து இருக்கிறார்கள்.
வாரத்தின் இறுதியில் சரியாக விளையாடாதவர்களை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பி வைத்து பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சமைத்து தருவது மற்றும் வேலை செய்வதுதான் இவர்களுக்கு தண்டனை இவ்வாறு இருந்து வருவதனால் போட்டியாளர்களுக்கிடையே கடும் வாக்குவாதங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும் இந்நிகழ்ச்சியின் நாரத வேலை பார்த்து வரும் போட்டியாளர்தான மாயா இவர் ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர். இவ்வாறு இவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மாயா கிருஷ்ணன் 2015ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார் முக்கியமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதன் மூலம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பைப் பெற்று வரும் மாயா இந்த ஆண்டு வெளியான சிம்மம் படத்தில் நடித்திருந்தார்.
திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்த மாயா சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தன்னுடைய அம்மா அப்பாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்த மாயாவின் குடும்ப புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.