உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 7ல் கலந்து கொள்ளபோகும் 10 போட்டியாளர்கள் லிஸ்ட்..

Biggboss 7
Biggboss 7

Biggboss 7 : பிரம்மாண்ட பொருட்செலவில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை கமலஹாசன் சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார் இது விஜய் தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வருகின்றன இதுவரை ஆறு சீசன்கள் நடந்து முடிந்த நிலையில் ஏழாவது சீசன் அடுத்த மாத முதல் வாரத்திலேயே துவங்கப்பட இருக்கின்றன.

இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாலமே இருக்கின்றனர். பிக் பாஸ் சீசன் 7 துவங்க இன்னும் ஒரே வாரம் இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கின்றனர் அதிலும் பிக் பாஸை கமல் தொகுத்து வழங்கும் விதமே வேற ரகம்.. ஒரு பிரச்சனையை போட்டியாளர்கள் மற்றும் மக்களுக்கு அவ்வளவு அழகாக பேச்சாலே புரிய வைப்பவர்.

இவரது பேச்சுக்கு என்றே இந்த நிகழ்ச்சியை பலரும் கண்டு களித்து வருகின்றனர்.. இந்த பிக் பாஸ் ஏழாவது சீசனை தொகுத்து வழங்க கமல் 130 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார் என கூறப்படுகிறது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பல்வேறு துறையில் இருந்தும் கலந்து கொள்வார்கள் உதாரணத்திற்கு நடிகர், பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர், நடனக் கலைஞர்..

சீரியல் நடிகர், சீரியல் நடிகைகள், நாடக கலைஞர், காமெடி நடிகர் தொகுப்பாளர் என சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு அனைத்து துறைகளில் இருந்தும் பிக் பாஸில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொள்வது வழக்கம் அப்படி இந்த சீசனிலும் பல்வேறு துறைகளில் இருந்து கலந்து கொண்டிருக்கின்றனர் கிட்டத்தட்ட ஒரு மாதங்களாக பிக் பாஸ் போட்டியாளர்கள் பற்றிய செய்தி தான் தினம் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் கடைசியாக பைனல் பண்ணி ஒரு லிஸ்ட் ஒன்றை அனுப்பி இருக்கின்றனர்.. அதில் யார் யார் பெயர் இருக்கின்றன என்பதை பார்ப்போம்.. 1. ரவீனா, 2. ஜோவிகா, 3. தர்ஷா குப்தா, 4. குமரன், 5. இந்தரஜா, 6. விஷ்ணு, 7. சத்யா, 8. அனையா, 9. மூன்நிலா, 10. பப்ளு பிரித்திவிராஜ் போன்றோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கின்றன.