விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வார வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற தற்போது அமுதவாணன், ஏ டி கே, சிவின், ரக்ஷிதா, மைனா நந்தினி, அசிம், கதிரவன், விக்ரமன் போன்ற போட்டியாளர்கள் இருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சி 80 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் ஃப்ரீஸ் டாஸ்க் நடைபெற்றது அதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வந்து சிறப்பித்தனர். அதனால் சென்ற வாரம் டாஸ்குகள் ஏதும் இல்லாமல் போட்டியாளர்கள் செம ஜாலியாக இருந்தனர்.
அதற்கெல்லாம் சேர்த்து வைத்து பிக் பாஸ் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கொடுத்துள்ளார். இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் கடுமையாக விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 6 இன்னும் சில வாரங்களில் முடிவடைய உள்ளதால் வெற்றியாளர் யாராக இருப்பார் என மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தற்போது வரை வந்துள்ள ஓட்டிங் படி குறைந்த வாக்குகளை பெற்று அமுதவாணன் தான் கடைசியில் இருக்கிறார். ஆனால் அமுதவாணன் இந்த வாரம் நடைபெற்ற..
டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஃபைனலிஸ்டாக பினாலே சென்றுள்ளார். அதனால் அவருக்கு அடுத்த இடத்தில் குறைந்த வாக்குகளை வாங்கி இருக்கும் சிவின் தான் இந்த வார பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிய வருகிறது.