சினிமா உலகில் எப்படி ஒரு படம் ஹிட் அடித்து விட்டால் அதன் அடுத்த அடுத்த பாகம் வெளியிடுவார்களோ அதே போல சின்னத்திரை தொலைக்காட்சிகளும் அதை பின்பற்ற ஆரம்பித்துவிட்டது. விஜய் டிவி தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகள் மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுத்து சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் குறிப்பாக அண்மையில் வந்த ராஜு வீட்டில பார்ட்டி..
நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்து இழுத்து உள்ளது இருந்தாலும் விஜய் டிவியில் மிகப்பெரிய ஃபேமஸான நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான் இந்த நிகழ்ச்சி முதலில் சூப்பராக மக்கள் மனதில் இடம் பிடித்தது அதன் பிறகு அதை பார்ட் 1, பார்ட் 2 சீசன் ஆக எடுத்து வருகின்றனர். இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளன.
6 -வது சீசன் வருகின்ற அக்டோபர் 9 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட இருக்கிறது. ரசிகர்கள் இதை இப்பொழுதே பெரிய அளவில் எதிர்நோக்கி உள்ளனர் அதேசமயம் இந்த நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்கப் போவது யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரொம்ப ஆர்வமாக இருக்கின்றனர்.
நமக்கு கிடைத்துள்ள உறுதியான தகவல் என்னவென்றால் பிக்பாஸ் 6 வது சீசனை உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவது உறுதி.. மற்றபடி இந்த சீசனில் யார் யார் போட்டியாளராக கலந்து கொள்வார்கள் என்பது இதுவரை உறுதிப்படுத்தவில்லை ஆனால் ஒரு சில பெயர்கள் தொடர்ந்து அடிபட்டுக் கொண்டே இருக்கிறது அது குறித்து வேண்டுமானால் விலாவாரியாக தற்போது பார்ப்போம்..
அந்த வகையில் பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரி பிரியன் செல்வது உறுதி என சொல்லப்படுகிறது அவரைத் தொடர்ந்து டிடி, கோலிவுட் பிரபலமாக இருக்கும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் ஆகியோர்கள் கலந்து கொள்ள அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது வெகுவிரைவிலேயே பிக்பாஸ் அறிவிக்கும் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.