பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக துப்பாக்கிச் சூடு.! அதிர்ச்சி தகவலை கூறி அதிர வைத்த கமல்..

பிக்பாஸ் 5 மிகவும் பிரமாண்டமாக அறிமுகமாகியுள்ள நிலையில் நான்கு சீசன்களை விடவும் இந்த சீசனில் பல மாற்றங்கள் இருக்கிறது. அதாவது இந்த முறை 18 போட்டியாளர்களை களமிறக்கி உள்ளார்கள் இதனைத்தொடர்ந்து வீடு முழுவதும் பசுமையான காட்சிகள் இடம்பெற்று உள்ளது. அதோட வழக்கத்தைவிட மிகவும் விறுவிறுப்பாகவும் காமெடி நிறைந்ததாகவும் காணப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் திருநங்கையான நமிதா மாரிமுத்து இன்றைய முதல் ப்ரோமோவில் இல்லாததால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர் ஏனென்றால் நமீதா தனது வாழ்வில் நடந்த பலவற்றையும் கூறி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். அதோட நமீதா இந்த நிகழ்ச்சியின் மூலம் என்னைப் போன்றவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் சமூகத்தை மாற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தார்.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களினால் நிகழ்ச்சியிலிருந்து நேற்று வெளியேறிவிட்டார். சனி கிழமை அன்று கமலஹாசன் அனைத்து போட்டியாளர்களையும் கலாய்த்து காமெடி செய்து வந்தார்.

அந்தவகையில் பிரியங்காவை நீங்க கேஸ் வழியாகவே கதை சொல்றீங்க போல என்று பிரியங்காவை கலைத்துவிட்டு இரண்டாவதாக இமான் அண்ணாச்சியை எனக்கு ஒரு சின்ன பதட்டம் இருக்கிறது  நீங்கள் இங்கிலீஷ் கத்துகிறேன் என்ற பெயரில் வட்டார வழக்கை மறந்து விடுவாரோ என்ற பயம் உள்ளது என்றும் கூறினார்.

அதன் பிறகு இந்த வீட்டில் முதன் முறையாக துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு காரணமாக இருந்த ஒருவர் அபிஷேக் என்று கூறி தூங்காதே தம்பி தூங்காதே என்றும் கூறியிருந்தார். அதோடு இன்றைய இரண்டாவது  ப்ரோமோ முடிகிறது.