கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.. பாரதிகண்ணம்மா சீரியல் என்ட்ரி கொடுக்கும் பிக்பாஸ் 6 போட்டியாளர்.!

bharathi-kannamma
bharathi-kannamma

விஜய் டிவி தொலைக்காட்சி எப்பொழுதும் வித்தியாசமான தொடர் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை கொடுக்கக்கூடியது. அதில் ஒன்று பிக்பாஸ்..  இந்த நிகழ்ச்சி மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதால் தொடர்ந்து சீசன் சீசனாக நடைபெற்று வருகிறது ஐந்து சீசன்கள் முடிந்த நிலையில் அண்மையில் 6 – வது சீசனும் வெற்றிகரமாக முடிந்தது.

இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். ஜி பி முத்து சொந்த காரணங்களால் வெளியேற மற்றவர்கள் ஒவ்வொருவராக எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினார் கடைசி மூன்று இடத்தை  ஷிவின், விக்ரமன், அசீம் பிடித்தனர். இறுதியில் டைட்டில் வின்னர் பட்டத்தை அசீம் தட்டி பறித்தார்.

ஒரு சில மக்களுக்கு அசீம் வெற்றி பெற்றது பிடித்திருந்தாலும் பெரும்பாலானோருக்கு அது பிடிக்கவில்லை தொடர்ந்து விமர்சனங்களை கொடுத்து வந்தனர்.  இது எப்படியோ ஒரு வழியாக பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிந்தது அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் பணித்த பலருக்கு பட வாய்ப்புகளும், சின்னத்திரை வாய்ப்புகளும் குதிந்த வண்ணமே இருக்கின்றன.

அவர்களில் ஒருவராக இறுதிவரை சென்ற ஷிவனுக்கு தற்பொழுது விஜய் டிவியில் ஒரு முக்கிய சீரியலில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பாப்புலரான சீரியல்  என்றால் அது பாரதி கண்ணம்மா   சீரியல் தான்..

இப்பொழுது கிளைமாக்ஸ் காட்சியை எட்டி உள்ளது. இதில் ஷிவின்  ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் அதனை உறுதிப்படுத்த தனது ட்விட்டர் பக்கத்தில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிக்கிறேன் என்பதை கூறியுள்ளார் இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shivin
shivin