BIGG BOSS 6 : கமலிடம் சிக்காமல் தொடர்ந்து எஸ்கேப் ஆகும் போட்டியாளர்..! பெருகும் ஆதரவு

bigg-boss
bigg-boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் மக்கள் பலரும் விரும்பி பார்க்கக் கூடிய ஒரு என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சி. இதன் ஆறாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டு ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் எலிமினேட்டாக மீதமுள்ள போட்டியாளர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

சென்ற வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதை சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் ஒரு சிலர் எதுக்குத்தான் வந்தோம் என்றே தெரியாமலே இருக்கின்றனர் ஆனால் தனக்கு தோன்றியவற்றையெல்லாம் பேசி துணிச்சலுடன் விளையாடிய தனலட்சுமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆக்கியது.

மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து யாரை வெளியேற்றுவது யாரை டைட்டில் ஜெயிக்க வைப்பது என்பதை விஜய் டிவி தான் தேர்வு செய்யும் என்ற பேச்சும் இருக்கின்றன. ஒவ்வொரு சீசனிலும் விஜய் டிவி பிரபலங்கள் சிலர் கலந்து கொள்வது வழக்கம் அப்படி இந்த சீசனிலும் நடந்துள்ளது. இந்த நிலையில் ஒரு போட்டியாளர் மட்டும் இதுவரை நாமினேஷனில் சிக்காமல் இருந்து வருகிறார் என கூறப்படுகிறது.

அவர் வேறு யாரும் அல்ல நம்ம அமுதவாணன் தான். இவரும் விஜய் டிவி பிரபலம் என்பதால் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறார் என கூறப்படுகிறது. அமுதவாணன் விளையாடும் முறை அவரது பேச்சு போன்றவை சில பிரச்சனையை கிளப்புகிறது அசீம் மற்றும் அமுதவாணன் இடையே கூட சில பிரச்சனைகள் நடந்தது.

இதனால் அமுதவாணன் நாமினேட் ஆனால் அவரை வெளிய அனுப்ப ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால் இந்த வாரமும் அமுதவாணன் கேப்டன் ஆகி அதிர்ஷ்டவசமாக தப்பினார். இருந்தாலும் பிக் பாஸ் அமுதவாணனையும் நாமினேட் செய்யலாம் என்று கூறின. இருந்தும் பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் அமுதவாணன் நாமினேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது