‘லியோ’ படத்தில் இணைந்த பிக்பாஸ் 6 போட்டியாளர்.!

LEO

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை எஸ் லலித் குமார் தயாரிப்பில், ஜெகதீஷ் பழனிசாமி இணை தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு தமிழ், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹெம்சா பணிபுரிந்து வருகிறார். இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஜனவரி 2ஆம் தேதி துவங்கிய நிலையில் காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், அர்ஜுன் ஆகியோர்கள் நடித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் அமுதவாணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பனிமலை சூழ்ந்த இடத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்த நிலையில் அதில், ‘What If’ என்ற கேப்சனுடன் தளபதி 67, லோகேஷ் கனகராஜ் ஆகிய Hashtag-களை பதிவிட்டுள்ளார். எனவே அமுதவாணன் லியோ திரைப்படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்குறி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

AMUTHAVAN
AMUTHAVAN

எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமுதவாணன் விஜய் டிவியில் பல காமெடி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ள நிலையில் மேலும் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் பங்கு பெற்ற பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.