சம்மந்தமே இல்லாமல் கத்திக் கொண்டிருந்த ஆயிஷாவுக்கு இத்தனை லட்சம் சம்பளமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ayisha
ayisha

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது 60 நாளை கடந்து மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் வாரம் தோறும் மத்தியில் குறைவான வாக்குகளை பெரும் போட்டியாளர்கள் தொடர்ந்து வெளியேறி வருகிறார்கள்.

அந்த வகையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கடந்த வாரம் வரை 8 பேர் வெளியேறி 13 பேர் பங்கு பெற்று வந்தார்கள் மேலும் கடந்த வாரம் டபுள் எஃபெக்ட்ஸ் இருந்த நிலையில் ராம், ஆயிஷா இருவரும் வெளியேறிய நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சினை ஏற்படுத்தியது. ஏனென்றால் தற்பொழுது வரையிலும் வைல்ட் கார்டு என்ரியாக எந்த ஒரு போட்டியாளரும் அறிமுகமாகவில்லை.

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே 21 போட்டியாளர்களுடன் தொடங்கியதுதான் மேலும் இவ்வாறு போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தினால் போட்டியாளர்களுக்கு இடையே கடும் பிரச்சனை ஏற்பட்டது மேலும் குழாயடி சண்டையை தோற்கடிக்கும் அளவிற்கு மோசமான பிரச்சனைகள் அரங்கேறியது.

இப்படிப்பட்ட நிலையில் கடந்த வரம் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறிய ஆயிஷா சம்பளம் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது ஆயிஷா மலையாளியா ஆவார் பிறகு வாய்ப்புக்காக மாடலிங் ஈடுபட்டு வந்த இவர் தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சத்யா சீரியலில் நடித்து மிரட்டி இருந்தார்.

இந்த சீரியல் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலத்தை தந்தது மேலும் சத்யா 2 சீரியலிலும் நடித்து வந்த இவர் இந்த சீரியல் முடிந்தவுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் மேலும் இவர் சத்தியா சீரியலில் நடித்து வரும் விஷ்ணுவை காதலித்து வருவதாகவும் வதந்திகள் ஏற்பட்டு இருந்தது.

இப்படிப்பட்ட நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 50 நாட்களைக் கடந்த நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அந்த வகையில் இவர் ஒரு நாளைக்கு 25,000 முதல் 30,000 வரை சம்பளம் பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.