அட,பிக்பாஸ் எனக்கு வேண்டாம் சாமி என ஓட்டம் பிடித்த பிரபலம்.!

bigg boss 5
bigg boss 5

கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்று வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தமிழில் நான்கு சீசன் முடிந்த நிலையில் கொரோனாவால் பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்பொழுது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தகவல் கமல்ஹாசன் நடித்துள்ள ப்ரோமோ ஒன்று வெளியாகி அறிவிக்கப்பட்டது. ஆனால் பிக் பாஸ் சீசன் 5 -வின் லோகோ ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்றும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு தற்பொழுது தான் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளது அதோடு இந்த சீசனில் விஜய் டிவியில் பணியாற்றி வரும் எந்த பிரபலமும் கலந்து கொள்ள கூடாது என்றும் முடிவெடுத்துள்ளார்களாம். இதனைத்தொடர்ந்து இந்த சீசனில் யூடியூப் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் இருக்க வேண்டும் என்று ரூட்டை மாற்றி உள்ளார்களாம் விஜய் டிவி.

தற்போது யூடியூப் சென்சேஷன் என்றால் அது ஜிபி முத்து தான். ஜி பி முத்து இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்று விஜய் டிவி எதிர்பார்க்கப்பட்டு இருந்த நிலையில் எதிர்பாராதவிதமாக ஜிபி முத்துவிற்கு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிந்து வருவதால் இந்நிகழ்ச்சியில் ஜி பி முத்து கலந்துகொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார் என்ற தகவல் விஜய் டிவிவை செம அப்செட் செய்துள்ளதாக கூறப்படுகிறது.