விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான பிரபலங்கள் தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார்கள் அந்த வகையில் பிக்பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் நடிகர் சசிகுமார் ஜோடியாக திரைப்படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதையாம்சமுள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் தான் நடிகர் சசிக்குமார் இவருடைய நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பற்றி திரைப்படம் தான் உடன்பிறப்பே இந்த திரைப்படத்தினை இரா. சரவணன் என்பவர் இயக்கி இருந்தார். இவ்வாறு சசிகுமாரின் அடுத்த படத்தையும் இவரே இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆம், சரவணன் இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் நந்தன் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக சுருதி பெரியசாமி நடித்த வருகிறார் இவர் பிக்பாஸ் சீசன் ஐந்தாவது நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இவர் ஒரு மாடலாவார்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்களுடைய கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கிராமத்து கதை அம்சத்தை வைத்து உருவாக்கி வருகிறது ஒரு பணக்காரருக்கும் அவரிடம் வேலை பார்க்கும் தொழிலதிபருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மற்றும் அதற்கான விளைவுகளை வைத்து இந்த படத்தின் கதை அமைந்துள்ளது. அந்த வகையில் பாலாஜி சக்திவேல் பணக்காரராகவும் அவரிடம் வேலை பார்க்கும் பல தொழிலாளர்களில் ஒருவராக சசிகுமார் நடித்து வருகிறார்.
இவ்வாறு சசிகுமாரின் மனைவியாக சுருதி நடித்துள்ள நிலையில் இந்த படத்தின் பிடிப்பு புதுக்கோட்டை அருகே நடைபெற்று வருவதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் எனவும் இயக்குனர் இரா சரவணன் தெரிவித்துள்ளார். மேலும் சுருதி பெரியசாமி இந்த படத்தின் மூலம் நான் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்றும் அவருக்கு இந்த படம் நிச்சயம் ஒரு பெரிய பிரேக்காக இருக்கும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.
மேலும் பாலாஜி சக்திவேல் தோரணை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்றும் எனவே இந்த படத்தில் அவரை வில்லனாக நடித்து வைத்திருப்பதாகவும் அவரது கேரக்டர் நிச்சயம் பேசப்படும் எனவும் இயக்குனர் சமீப பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.