பிக்பாஸ் வீடா இல்ல.. காடா.. வைரலாகும் புகைப்படம்..!

kamal
kamal

சினிமா உலகில் ஒரு படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த படத்தின் அடுத்த அடுத்த பாட்டு வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அந்த வகையில் தற்பொழுது சின்ன திரையிலும் இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசன் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து அடுத்த அடுத்த சீசன்கள் தொடர்ந்து வெளிவந்து மக்களை சந்தோஷப்படுத்துகின்றன அந்த வகையில் இதுவரை ஐந்து பிக்பாஸ் சீசன் முடிந்துள்ளது ஆறாவது பிக்பாஸ் சீசன் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது இதை மக்கள் தொடங்கிய இல்லத்தரசிகள் வரை பலரும் பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர்.

அதற்கு முன்பாக பிக்பாஸ் சீசன் இருந்து யார் யார் கலந்து கொள்வார்கள் என்பதை தெரிந்து கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர் நமக்கு கிடைத்த தகவலின் படி பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குவது மட்டும் தான் உறுதியாக தெரியும்.. மற்றபடி போட்டியாளர்கள் யார் யார் என்பது தெரியவில்லை..

ஆனால் ஒரு சில பெயர்கள் தொடர்ந்து அடிபட்ட வண்ணமே இருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாட்களில் யார் யார் போட்டியாளர்களாக களம் இறங்கப் போகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விடும்.  இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புது விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது அதாவது பிக்பாஸ் சீசன்  6 வீடு எப்படி இருக்கும் என பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில் அதன் புகைப்படங்கள் தற்பொழுது வெளிவந்துள்ளன.

பார்ப்பதற்கு பிக்பாஸ் வீடு போல தெரியவில்லை ஒரு காடு போல அமைக்கப்பட்டிருக்கிறது.. அதுவும் பார்ப்பதற்கு மிகப் பிரமாண்டமாக தான் இருக்கிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.  இதோ நீங்களே பாருங்கள் பிக்பாஸ் சீசன் 6 வீட்டின் புகைப்படத்தை..