அடேங்கப்பா பிக்பாஸ் ஜூலியா இது.! நடிகைகளை ஓரம் கட்டும் அளவிற்கு செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படம்.

julie
julie

பிரச்சனை என்றால் போராட்டங்களாக வெடிப்பது உண்டு. அத்தகைய போராட்டங்கள் மூலம் பிரபலமடைந்தவர்கல் அரசியல்வாதிகள் மற்றும் பிரமுகர்கள் பிரபலம் அடைவார்கள்.அனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பிரபலம் அடைந்தவர் தான் ஒரு சாதாரண பெண்ணான ஜூலி. இந்த போராட்டத்தை தொடர்ந்து அவர் மீடியா உலகில் பிரபலம் அடையத் தொடங்கினார்.

இவர் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தும் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் வீட்டில் பலவிதமான விமர்சனங்களை பெற்றதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

அதிலிருந்து வெளிவந்த பிறகும் ரசிகர்கள் இவர் எதை செய்தாலும் அதனை விமர்சித்து வந்தனர்.இருப்பினும் அதனை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் தனது புகைப்படங்கள் மற்றும் கருத்துகளை பதிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் தற்போது அவர் செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் விமர்சிக்காமல் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் தற்போது இவர் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் அனிதா எம்பிபிஎஸ், அம்மன் தாயி, பொல்லாத உலகின் பயங்கர கேம் பப்ஜி போன்ற பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் இது போன்ற புகைப்படங்கள் ரசிகர் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த புகைப்படம்.