சின்னத்திரையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் பலரின் பேவரேட் நிகழ்ச்சி ஆகும் இந்த நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனுக்கும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள் அந்தவகையில் தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 எப்போது வரும் என பலரும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.
மேலும் இதில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் மற்றும் பிரபலங்கள் என அனைவரிடமும் பரிச்சயமாகி சினிமா துறையிலும் சிறப்பாக வளர்ந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த ஐந்தாவது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர் பவானி ரெட்டி இவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஆவார். அதிலும் குறிப்பாக சின்னதம்பி சீரியலில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் குடியேறியவர்.
ஒருகட்டத்தில் பாவனி ரெட்டி தெலுங்கு சீரியல் நடிகரான பிரதீப் என்பவரை காதலித்து இருவரும் இருவீட்டாரின் சம்மதத்துடன் சிறப்பாக திருமணம் செய்து கொண்டதை அடுத்து சில வருடங்களிலேயே பாவணி ரெட்டியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்து கொண்டார் பின்பு தனியாகவா வாழ்ந்து வந்த பாவணிக்கு பிக் பாஸ் பிளாட்பார்ம் அவரது கேரியரில் முக்கிய இடமாக அமைந்தது.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிக் பாஸ் வீட்டில் நடனக்கலைஞர் அமீர் பாவணியை காதலிப்பதாக கூறியிருந்தார் ஆனால் பாவணி அதனை மறுத்து விட்டார் இருந்தாலும் அமீருக்கு பாவணியை திருமணம் செய்து கொள்ளும் ஆசை தற்போது வரை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கி பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவணி இருவரும் ஜோடிகளாக கலந்து கொண்டு வருகின்றனர்.
தற்போது அந்த நிகழ்ச்சியில் இவர்கள் நடனம் ஆடுவதற்காக போட்டுக்கொண்ட காஸ்ட்யூமில் அமீர் பாவனியின் சேலையை கடித்து இழுப்பது போன்று எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.