TRP -க்காக போட்டியாளர்களை வாட்டி வதைக்க பிக்பாஸ் 7 -ல் வந்த புதிய ரூல்ஸ்.. இதுக்கு அரிசி மூட்டை குடோன்லயே இருக்கலாம்

bigboss 7
bigboss 7

Bigboss 7 : வெள்ளி திரைக்கு நிகராக சின்னத் திரையும் பிரம்மாண்ட பொருட் செலவில் பல ரியாலிட்டி ஷோக்களையும் கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் சீசன் சீசன்னாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இதுவரை வெற்றிகரமாக 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் கூடிய விரைவில் பிக்பாஸ் 7 வது சீசனும் தொடங்கப்பட உள்ளது.  இந்த சீசனையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக மிகப்பெரிய தொகையை சம்பளமாக வாங்கி உள்ளது. பிக்பாஸ் 7 சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகி வைரலாகியது.

அதனை தொடர்ந்து இந்த 7 வது சீசனில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் யார் யார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கபடுகிறது. எந்த பக்கம் திரும்பினாலும் பிக்பாஸ் 7 பற்றிய பேச்சு தான் தற்பொழுது அதிகம் இருக்கிறது. இந்த நிலையில் பிக்பாஸ் 7 குறித்து ஒரு தகவல் கிடைத்து உள்ளது.

கடந்த சீசனை காட்டிலும் இந்த சீசன் சற்று வித்தியாசமாக இருக்கும் என இருக்கும்..  பல விதிமுறைகளும் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாக இந்த சீசனில் இரண்டு வீடு கான்செப்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டில் வழக்கம்போல் பிரம்மாண்ட வசதியுடன் காணப்படுமாம்..

மற்றொரு வீட்டில் எந்த வித வசதியும் இருக்காதாம் இதில் எலிமினேஷன் ஆனவர்கள் தங்க வைக்கப்படலாம் எனவும் இந்த வீட்டில் கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த இரண்டாவது வீடு கான்செப்ட் மற்ற மொழி பிக் பாஸில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.