Kamal : நடிப்பிற்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் கடைசியாக இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் படத்தில் நடித்தார். படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று 420 கோடியின் மேல் வசூல் அள்ளி மிகப்பெரிய ஒரு சாதனை படைத்தது.
விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணமே இருக்கின்றன. கைவசம் இந்தியன் 2, கல்கி 28 98 ஏடி, ஹச் வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படமும் பண்ண உலகநாயகன் கமலஹாசன் திட்டமிட்டு இருக்கிறார்.
இதில் முதலாவதாக இந்தியன் 2 வெளிவர இருக்கிறது படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் போய்க்கொண்டிருக்கிறது வெகு விரைவில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளும் நடைபெறும் என தகவல்கள் வெளிவருகிறது. இந்தியன் 2 படத்தில் நடிக்க உலக நாயகன் கமலஹாசன் மிகப்பெரிய ஒரு தொகையை சம்பளமாக வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
வெள்ளித்திரையில் படும் பிஸியாக வரும் உலக நாயகன் சின்னத்திரையில் அவ்வபோது தலைகாட்டி வருகிறார் அதன்படி விஜய் டிவி தொலைக்காட்சியில் சீசன் சீன்னாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்தான் தொடர்ந்து தொகுத்து வழங்கி வருகிறார் அதன்படி பிக்பாஸ் 7 வது சீசனையும் அவர்தான் தொழுது வழங்குகிறார்.
இதற்கு எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பது குறித்து ஒரு தகவல் நமக்கு கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் பிக்பாஸ் 7 வது சீசனை தொகுத்து வழங்க அவருக்கு சம்பளம் சுமார் 130 கோடி என சொல்லப்படுகிறது விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் கமலஹாசன் காட்டில் காசு மழை என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.