Biggboss 6 : இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் பெண் போட்டியாளர்.! யார் தெரியுமா.?

bigboss
bigboss

வெள்ளித்திரை தொடர்ந்து சின்னத்திரையும் மக்கள் மற்றும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இழுத்து வருக்கிறது குறிப்பாக சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சி அதிக ரியாலிட்டி ஷோகள் மற்றும் சீரியல்களை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறது. ஏன் அண்மையில் கூட பிக்பாஸ் 5 டைட்டில் வின்னர் ராஜூவை வைத்து ராஜூ வீட்ல பார்ட் என்னும் நிகழ்ச்சியை ஜோராக நடத்தி வருகிறது.

இது ஒரு காமெடியான ஷோவாக இருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடித்து போய் இருந்தது சிறப்பாக ஓடிக் கொண்டிருக்க  மறு பக்கம் பிக்பாஸ் சீசன் 6யும் தற்பொழுது தொடங்கியுள்ளது. வழக்கம் போல உலகநாயகன் கமலஹாசன் சீரும் சிறப்புமாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் பிக்பாஸ் 6 வது சீசனில் மொத்தம் 20 போட்டியாளர்கள்.

அதில் மொத்தம் பத்து ஆண் போட்டியாளர்கள் 9 பெண்கள் ஒரு திருநங்கை ஆகியோர் கலந்து கொண்டனர். பிக்பாஸ் 6 வது சீசன் மற்ற சீசன்களை விட சற்று வித்தியாசமாக இருக்கிறது ஏனென்றால் இதில் இருக்கும் போட்டியாளர்கள் எடுத்த உடனேயே சண்டை போட்டு கொள்கின்றனர். மேலும்  ஒற்றுமை இல்லாதது போல் தெரிகிறது.. பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பித்ததிலிருந்து வாரம் வாரம் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது.

இதுவரை ஒரு சில முக்கிய பிரபலங்கள் வெளியேறி உள்ளனர். ஜி பி முத்து மட்டும் தனது குடும்பத்திற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பிக்பாஸ் 6 வீட்டில் அவர் தற்பொழுது இருந்திருந்தால் நிச்சயம் அவர் இறுதிவரை செல்வார் ஆனால் அவரே வான்டடாக வெளியே போனது போட்டியாளர்களுக்கு தற்போது லக் அடித்தது போல் ஆகி உள்ளது.

இப்படி இருக்கின்ற நிலை  இந்த வாரமும் எலிமினேஷன் ரவுண்ட் இருக்கிறது இதில் ஒரு சிலர் நாமினேஷன் ஆகி உள்ளனர். குறைந்த ஓட்டுக்களை வாங்கும் போட்டியாளர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் அப்படி பார்த்தால் இந்த வாரம் குறைந்த ஓட்டுகளை தற்போது வரையிலும் வாங்கி இருப்பது.. செரினா  அவருக்கு முந்தைய இடத்தில் ஆயிஷா இருக்கிறார். இந்த இருவரில் யாரேனும் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

bigboss
bigboss