உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம். இந்தப் படம் வருகின்ற ஜூன் மூன்றாம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் கமலுக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல் நடிப்பில் வருவதால் இந்த படம் ஹிட்டடித்து.
அவரது சினிமா மார்க்கெட் மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டும் என கருதப்படுகிறது ரசிகர்களும் மக்களும் கமலின் நடிப்பை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டதால் இந்த படத்தை பார்க்க ஏங்கிக் கொண்டிருக்கின்றனர் இந்த படத்தில் இருந்து வெளிவந்த காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்து வந்துள்ளதால் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
மேலும் திரையரங்கு உரிமையாளர்களும் படத்தை கைப்பற்ற ஆர்வத்துடன் இருந்து வருகின்றனர் இது இப்படியிருக்க படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருப்பதால் கமலுக்கு நிகரான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களை படத்தில் உள்ளே இழுத்து போட்டுள்ளார் லோகேஷ்.
இந்தப் படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா போன்ற பலர் நடித்து அசத்தி உள்ளனர். கமல் இந்த படத்தில் 30 வயது இளைஞனாகவும் மற்றும் வயதான தோற்றத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளிவருவதற்கு முன்பாக இந்த படம் குறித்து சில விஷயங்களை லோகேஷ் கனகராஜ் கமலும் பகிர்ந்து வருகின்றனர்.
அப்படி ஒரு விஷயத்தை தான் அண்மையில் நடிகர் கமல் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஒரு சூப்பரான விஷயத்தைப் பகிர்ந்து உள்ளார். விக்ரம் படத்தில் கடைசி நிமிட முக்கிய காட்சிகளில் தான் சூர்யா நடித்துள்ளார் என்றும் இந்த கதாபாத்திரம் மூன்றாவது பாகம் வரை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அப்படி என்றால் விக்ரம் படத்தின் அடுத்த பாகம் அடுத்தடுத்து வெளிவர இருப்பதாக தெரிய வருகிறது.