சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் பலரும் ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா, சரத்குமார், விஜயகாந்த், கமல் என நாம் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு லிஸ்ட் பெருசாக இருக்கிறது.
இவர்களைத் தொடர்ந்து தற்பொழுது அரசியலில் களம் குதிக்க ரெடியாக இருப்பவர்தான் தளபதி விஜய் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை ரசிகர்கள் மன்றமாக மாற்றி தற்போது மக்களுக்கு சேவை செய்வதோடு மட்டுமல்லாமல் உள்ளூர் எலக்ஷனில் அவ்வபொழுது கலந்து கொள்கிறது.
வருகின்ற நாட்களில் மக்கள் இயக்கம் மிகப்பெரிய ஒரு அரசியல் கட்சியாக மாறும் என பலரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். விஜய் நினைத்தால் மிகப்பெரிய அளவில் ஒரு அரசியல்வாதியாக மாறி இருக்க வேண்டும் ஆனால் அவருக்கு பல முட்டுக்கட்டைகளை போட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது அது குறித்து
பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி சமீபத்திய பேட்டி ஒன்றில் இது குறித்து விலாவாரியாக பேசி உள்ளார்.. அதில் ஒன்றாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து விஜய் படங்களை தயாரித்து விஜய்யை மிகப்பெரிய ஒரு டாப் நடிகராகவே காட்டிக் கொண்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் யாரு.. திமுகவின் மேல் இடத்தில் இருப்பவர்கள் அதே போல உதயநிதி விஜய்யின் குருவி படத்தை தயாரித்தார்.
இப்படி தொடர்ந்து விஜய் படங்களை தயாரிப்பதால்.. விஜயை தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே திமுக வைத்துக் கொண்டது. நம்மை மீறி போய்விட மாட்டார் அப்படியே மீறிப் போய் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் நம்மை விமர்சிக்க மாட்டார் என திமுக கணக்கு போட்டதாக பிஸ்மி கூறி உள்ளார். மேலும் பேசி அவர் சரியாக சொல்ல வேண்டும் என்றால் திமுக கட்டுப்பாட்டில் விஜய் இருப்பதை விட கைக்குள் வைச்சி இருக்க முயற்சி செய்வதாக அவர் கூறியுள்ளார்.