“பிக்பாஸ் அல்டிமேட்” வீட்டில் சினேகன் மண்டையை பிசிக்க.. புடவையில் கூல்லாக போஸ் கொடுத்து அசத்தும் மனைவி கன்னிகா.

snehan-and-kanika

கவிஞர் சினேகன் தமிழ் திரைப்படங்களுக்கு பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவரது பாடல் வரிகள் காதல் ஜோடிகளை மிகவும் கவர்ந்து இழுத்து உள்ளன. இந்த நிலையில்  சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் சுமார் எட்டு வருடங்களாக காதலித்து வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் இவர்களுக்கு திருமணமாகின.

மேலும் இவர்களின் திருமணம் கமலஹாசன் முன்னிலையில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திருமணமான சில மாதங்களே ஆன நிலையில் தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சினேகன் கலந்து கொண்டுள்ளார்.  கவிஞர் சினேகன் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி அந்த சீசனில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் டைட்டில் வின்னர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். மேலும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் சில சண்டைகளும் அப்போது வந்த வண்ணம் உள்ளன.

மேலும் இதில் வனிதா சில வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.இந்த நிலையில் சினேகனும் எதற்கும் பயப்படாமல் அவருக்கு தோன்றியவற்றை தைரியமாக பிக் பாஸ் வீட்டில் பேசி வருகிறார். இதனையடுத்து சினேகனின் மனைவி கன்னிகா சின்னத்திரை சீரியல்கள் மற்றும் வெள்ளித் திரையில் ஒரு சில படங்களிலும் நடித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா தற்போது புருஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் கவலையில்லாமல் ஃபுல் மேக்கப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த நேரத்தில் இப்படி ஒரு மேக்கப் உனக்கு தேவையா என கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

kanika
kanika
kanika