ஒருவழியாக ஊர் சுற்ற கிளம்பிய பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் – அமீர், பவானி இப்போ எங்க இருகாங்க தெரியுமா.? வைரல் புகைப்படம் இதோ.

bhavani and amir

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் அமீர் மற்றும் பாவணி. இந்த நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவணி இருவரும் மக்களின் ஆதரவைப் பெற்று பைனல்ஸ் வரை சென்று உள்ளார்கள்.

மேலும் இதில் அமீர் வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டில் அமீர் வந்த சிலநாட்களிலேயே பவாணியிடம் நெருக்கமாக பேசி வந்தார். மேலும் பாவணியை காதலிப்பதாகவும் பிக்பாஸ் வீட்டில் கூறிவந்தார்.

ஆனால் பாவணி அமீரிடம் ஃபிரெண்டாகவே மட்டும் பேசினார். மேலும் இந்த பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ராஜு முதலிடத்தை பெற்று பிக்பாஸ் ட்ராபியை பெற்றுள்ளார் மேலும் 50 லட்சம் பரிசுத் தொகையையும் பெற்றுள்ளார்  ராஜுவை அடுத்து இரண்டாவது இடத்தில் பிரியங்காவும் அடுத்தடுத்த இடங்களில் பாவணி, அமீர் போன்றோரும் உள்ளனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தற்போது அமீர் மற்றும் பாவணி இருவரும் இணைந்து ஒன்றாக சில பேட்டிகளையும் கொடுத்து வருகின்றன.மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியிலும் பாவணி மற்றும் அமீர் இருவரும் இணைந்து ஒரு நடனம் ஆடியுள்ளனர் என தெரியவருகிறது.

இதனிடயே தற்போது பாவணி மற்றும் அமீர் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வருகின்றனர். அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

amir and bhavani
malavika-mohanan-