தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரான சிம்பு பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இப்படி சிறப்பாக வெற்றிநடை கண்டுவந்த சிம்பு இடையில் உடல் எடை சற்று அதிகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை.
அதனை அடுத்து இவர் பின்பு கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து கம் பேக் கொடுக்கும் வகையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து மக்கள் மனதில் பழைய இடத்தை பிடித்துள்ளார். பின்பு மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த மாநாடு திரைப்படம் சமீபத்தில் தான் திரையரங்கில் வெளியாகி நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
மேலும் சிம்புவிற்கு ஒரு சிறந்த படமாக விளங்கியது மாநாடு. இதனைத் தொடர்ந்து தற்போது சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தின் டீசர் கூட கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே வெந்து தணிந்தது காடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்புவுடன் பிக் பாஸ் 5 பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். சின்னத்திரை பிக்பாஸ் சீசன் 5 இறுதி கட்டத்தை நோக்கி விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமீபத்தில் வெளியேறிய வருண் வெந்து தணிந்தது காடு ஷூட்டிங்கில் இணைந்துள்ளார்.
மேலும் அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜோஷ்வா இமைபோல் காக்க படத்தின் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் ஸ்பாட்டில் வருண் சிம்புவுடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.