ஒரே இடத்தில் ஒன்று கூடிய பிக்பாஸ் சீசன் 4 பிரபலங்கள் – என்ன காரணம் தெரியுமா.? புகைப்படம் இதோ.

bigbos
bigbos

உலகநாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் வெற்றிகரமாக தொகுத்து வழங்கி வரும் ஒரு நிகழ்ச்சிதான் பிக் பாஸ். நான்கு சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் 5வது கட்ட சீசனும் தற்போது இறுதி கட்டத்தை எட்டி ஓடிக்கொண்டிருக்கிறது.

பிக் பாஸ் வீட்டில் இதற்கு முன் விளையாண்ட சினிமா பிரபலங்கள் மாடல் அழகிகள் என அனைவரும் தற்போது சினிமா வாய்ப்பை கைப்பற்றி வருகின்றனர் இதனால் அந்த பிக் பாஸ் பிரபலங்கள் ஒரே சமயத்தில் கூடுவது மிக அரிதான விஷயம் இப்படி இருக்கின்ற நிலையில் பிக் பாஸ் சீசன் 4- ல் விளையாண்டா போட்டியாளர்கள் சிலர் ஒன்று கூடி உள்ளனராம்.

மாடல் அழகி சம்யுத்தா பிறந்தநாளை முன்னிட்டு பிக் பாஸ் சீசன் 4- ல் விளையாண்ட பிரபலங்கள் சிலர் அந்த பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் பாலாஜி முருகதாஸ், ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், ஆஜித் மற்றும் பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

bigboss
bigboss

இவர்கள்அனைவரும் இணைந்தும், தனித்தனியாகவும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. மாடல் அழகி சம்யுத்தா  பிறந்தநாள் பார்ட்டிக்கு ஒருசில பிக்பாஸ் பிரபலங்களும் வரவில்லை அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, சனம் செட்டி,  கேப்ரில்லா மற்றும் ஒரு சிலர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

bigboss
bigboss

மாடல் அழகி சம்யுக்தா பிக் பாஸ் வீட்டில் வந்த பிறகுதான் அவர்கள் நல்ல நேரமே ஆரம்பித்தது ஆம் பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக பயணித்து ஒரு கட்டத்தில் வெளியேறினாலும்  அதன் பிறகு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும் விஜய் சேதுபதியுடன் இவர் ஒரு புதிய படத்தில் இணைந்து பணியாற்றினார் இப்போதும் கூட அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலும் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.

bigboss
bigboss
bigboss
bigboss