சம்பாரித்த காசை எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்ற பிக்பாஸ் ராஜூ.. இணையதள பக்கத்தில் வைரலாகும் புகைப்படம்.!

RAJU
RAJU

பிக்பாஸ் ஐந்தாவது நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டவர் ராஜு ஜெயமோகன். இந்த சீசனில் இவர் டைட்டிலை வின் செய்து ரூபாய் 50 லட்சம் மதிப்புள்ள பரிசுத் தொகையும் பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் ராஜு சின்னத்திரை சீரியல் நடிகராக வலம் வந்தார்.

மேலும் முன்னணி இயக்குனர் பாக்யராஜ் உடன் துணை இயக்குனராகவும் பணியாற்றி ஸ்கிரிப்ட் ரைட்டர் ஆக வேண்டுமென சுற்றித்திரிந்தார். இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ராஜுவின் அப்டேட்காக அவரது ரசிகர்கள் காத்திருந்த நிலையில் ராஜூ சீரியல், படம் என எந்த தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்  இவர் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து காயத்ரி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்பு ராஜு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற போதும் அவரது கதாபாத்திரம் மாற்றப்படாமல் அவர் துபாய்க்கு சென்றுள்ளதாக கதையில் கூறப்பட்டுள்ளன.

இந்த சீரியலின் இயக்குனரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ராஜு இந்த சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என எதிர்பார்த்த நிலையில் இதுவரை அது பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் கத்தி கதாபாத்திரத்திற்கு வேறு ஒரு பிரபலமும் மாற்றப்படாமல் இருந்து வருகின்றன. ராஜு படங்களிலும் இதுவரை கமிட் ஆகாத நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஆம் ராஜு அவரது காதல் மனைவி தாரிகா உடன் சேர்ந்து கோவா ட்ரிப் சென்றுள்ளார். அவரது மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகின்றனர்.

raju
raju
raju
raju