சின்னத்திரையில் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 106 நாட்களை கடந்து இன்றுடன் முடிய உள்ளது. இந்த பிக்பாஸ் சீசனில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது டாப்-5 லிஸ்டில் ராஜி, பிரியங்கா, நிரூப், பாவணி, அமீர் போன்ற 5 போட்டியாளர்கள் உள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் வெற்றியாளர்கள் யார் என்பது தெரிந்து விடும். ஆனால் பைனல் எபிசோட்டியின் படப்பிடிப்பு நேற்று முடிவடைந்த நிலையில் வெற்றியாளர் யார் என்பது சமூக வலைதள பக்கங்களில் லீக்காகி உள்ளது.
இந்த நிலையில் முதலிடத்தில் ராஜு இரண்டாவது இடம் பிரியங்கா மூன்றாவது இடம் பாவணி மற்றும் அதனைத் தொடர்ந்து அமீர் மற்றும் நிரூப் போன்றவர்கள் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ராஜு பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆகியது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
விஜய் டிவி சீரியல் கதாநாயகனாக நடித்து வந்த ராஜு தற்போது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை தக்க வைத்து மக்களிடையே பிரபலம் அடைந்துள்ளார். மேலும் இவருக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதே மூன்று திரைப்பட வாய்ப்புகள் கூட கிடைத்திருக்கிறது இதனிடையே அவர் வெளியே வந்த பிறகு பல்வேறு பட வாய்ப்புகள் வந்து சிறப்பாக முன்னேறுவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது ராஜு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருக்கு கொடுக்கப்பட்ட ட்ராபியுடன் அவரது ரசிகர்கள் இருவருடன் சேர்ந்து புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பரவி வருகிறது.