விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பில் பிக்பாஸ் ராஜு.! எதற்காக தெரியுமா.?

beast-raju
beast-raju

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ் 5 வது சீசன் இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அவர்களில் ஒருவர்தான் ராஜு. இவன் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் வெற்றியாளராக நியமிக்கப்பட்டார். பிக் பாஸ் 5 வது சீசன் முடிவடைந்த நிலையில் இவர் முதன்முதலாக அண்ணாச்சி வீட்டிற்கு அண்மையில் சென்றார்.

அதன் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது இந்த நிலையில் ராஜு அவர்கள் ஒரு வீடியோ கால் மூலம் பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்தார். அதில் ஒன்று தான் விஜய் அவர்களை பீஸ்ட் படப்பிடிப்பில் சந்தித்ததாக கூறினார்.

அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு 15 நாட்களுக்கு முன்புதான் பீஸ்ட் படப்பிடிப்பில் விஜய் சார் அவர்களை பார்த்தேன். அப்பொழுது விஜய் அவர்களை பார்த்தேன் எனக் கூறினார் அதுமட்டுமில்லாமல் படபிடிப்பில்  யாராவது புதிதாக விஜய்யின் கண்களில் தென்பட்டால் உடனே கண்டுபிடித்து விடுவாராம் அதே போல் தான் ராஜூ அவர்களை அழைத்து நீங்கள் புதுசா எனகேட்டுள்ளார்.

அதற்கு ராஜு ஆமாம் நான் நெல்சன் அவர்களுடன் வேலை செய்துள்ளேன் என கூறினாராம் அதன் பிறகு விஜய் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன் என்னுடைய கண்களுக்கு செம்மையாக இருந்தது எனக் கூறினார். அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் அவர்களுக்காக சிறுவயதிலிருந்தே சேர்த்து வைத்திருந்த புத்தகத்தையும் காட்டினேன் என கூறியுள்ளார்.

அதை அனைத்தையும் பார்த்துவிட்டு தளபதி விஜய் அவர்கள் ராஜு அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்ததாக அந்த பேட்டியில் சுவாரஸ்யமான தகவலை கூறியுள்ளார்.