நடிகர் சசிகுமாரை பங்கமாக கலாய்த்த பிக்பாஸ் பிரியங்கா.! கூட யார் யார் இருக்காங்க பாருங்க வைரலாகும் வீடியோ

priyanka-and-sasikumar
priyanka-and-sasikumar

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் பிரியங்கா. இவர் கடந்த பல வருடங்களாக விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் டிவியில் ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் ஜட்ஜாக பணிபுரிந்தார். அதனை அடுத்து இவரது பேச்சு திறமையின் காரணமாக பின்பு ஆங்கரிங் செய்ய ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர் கலக்கப்போவது யாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ், சூப்பர் சிங்கர்,ஸ்டார் மியூசிக், விஜய் டெலி அவார்ட்ஸ் போன்ற ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் சிறப்பாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொடர்ந்து மாகாபா வுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

அந்த நிலையில் பிரியங்கா பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளதால் அப்போது தொடங்கப்பட்ட சில நிகழ்ச்சிகளில் பிரியங்கா இடம் பெறவில்லை. அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பிரியங்காவிற்கு பதிலாக மாகாபா வுடன் இணைந்து மைனா நந்தினி தொகுத்து வழங்கி வருகிறார்.

மேலும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியையும் தற்போது மாகாபா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த போது அதில் போட்டியாளர்களாக கலந்துகொண்ட செந்தில் மட்டும் ராஜலட்சுமி தம்பதியினரிடம்  கேலியும் கிண்டலுமாக பிரியங்கா பேசி வருவார்.

அந்த வகையில் தற்போது பிரியங்கா ராஜலட்சுமி உடன் இணைந்து சசிகுமார் ஸ்டைலில் நான் சிரிக்கிறேன் என்று காமெடி செய்துள்ளார். இந்த வீடியோவை ராஜலட்சுமி அவரின் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது.