இணையதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் தாமரை செல்வியின் வீடு – வியப்பில் ரசிகர்கள்.

thamarai
thamarai

தமிழில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 85 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி சிறப்பாக பயணித்து வருகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளனர் மற்றும் போட்டியின் இடையில் வைல்டு கார்டு என்ட்ரியாக மூன்று நபர்களும் மொத்தம் 20 பேர்.

போட்டியாளர்களில் 12 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் தற்போது டாப் 8 போட்டியாளர்களான  ராஜி, பிரியங்கா, சிபி, நிருப், சஞ்சீவ் பாவணி, அமீர், தாமரைச்செல்வி  போன்ற எட்டு போட்டியாளர்கள்  தற்போது பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இந்த எட்டு போட்டியாளர்களில் ஒருவரான தாமரைச்செல்வி இவர் நாடகத்துறையில் இருந்து வந்துள்ளவர்.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் கடந்து வந்த பாதை என்ற டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும்  அவர்களது வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணத்தைப் பற்றி கூறியிருந்தனர். அதில் தாமரைச்செல்வி அவர் குடும்பம் மற்றும் கணவர் பற்றி பேசி இருந்தார் அதில் அவர் குடும்ப வறுமையின் காரணமாக இளம் வயதிலேயே தாமரைச்செல்வியை நாடகத்துறையில் சேர்த்து விட்டுள்ளனர்.

பின்னர் அவர் முதல் திருமணம் செய்து கொண்ட வாழ்க்கை பிரச்சினையில் முடியவே இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்.  மேலும் தாமரையின் இரண்டாவது கணவர் பார்த்தசாரதி தற்போது ஒரு ஜவுளிக்கடையில் தான் வேலை செய்து வருகிறார்.

இப்படி மிக எளிமையாக வாழ்ந்து வந்த தாமரைச் செல்வியின் பெரிய வீடு ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.  அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கஷ்டப்படுற குடும்பம் என்று சொன்னாங்க ஆனா இவ்வளவு பெரிய வீடா என  சுட்டிக்காட்டி வருகின்றன. இதோ தாமரைச்செல்வி வீட்டின் புகைப்படங்கள் நீங்களே பாருங்கள்.

thamarai
thamarai