நமது நாட்டில் பல்வேறு போராட்டங்கள் நடந்துள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலமாக மக்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் ஜூலி இவரை ரசிகர்கள் வீர தமிழச்சி என கொண்டாடி வந்தார்கள்.
அந்த வகையில் நமது ஜூலி தன்னுடைய ஒட்டுமொத்த பிரபலத்தையும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மொத்தத்தையும் இழந்துவிட்டார் என்பதே உண்மை. இந்த விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்தாலும் ரசிகர்களுக்கு மறக்க முடியாத சீசனாக அமைந்ததுதான் முதல் சீசன்.
இந்த முதல் சீசனில் ஜூலி ஓவியா போன்ற முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் அந்த வகையில் இந்த சீசனில் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட சண்டைக்கும் கலவரத்துக்கும் பாரபட்சமில்லாமல் இருந்து வந்தன. மேலும் இதன் மூலமாக அவருக்கு பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ஜூலி ரசிகர்களால் அவமதிக்கப்பட்டார்.
என்னதான் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிண்டலையும் கேலிகளையும் அனுபவித்தாலும் அதன்பிறகு அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது உண்மை தான் அந்த வகையில் இவர் நடிப்பில் ஒரு அம்மன் திரைப்படம் உருவாகி பாதியிலேயே கைவிடப்பட்டது.
மேலும் தற்போது கூட ஜூலி பல்வேறு கல்லூரி நிகழ்ச்சி பொது நிகழ்ச்சி என பலவற்றில் கலந்துகொண்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இவ்வாறு பிரபலமான ஜூலி காதலில் விழுந்துள்ளதாக ஏற்கனவே பல தகவல்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகி வைரல் ஆகின.
அந்த வகையில் தன்னுடைய காதலன் தற்போது தன்னை ஏமாற்றி விட்டதாக அண்ணாநகர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் தன்னுடைய காதலனுக்கு பல்சார் பைக் வாங்க பணம் கொடுத்தது மட்டுமில்லாமல் தன்னுடைய நகைகள் பலவற்றையும் அவருக்கு கொடுத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது திருமணம் செய்து கொள்வதாக கூறி என்னிடம் பணம் நகை போன்றவை வாங்கியதன் காரணமாக அவர் மீது புகார் அளித்துள்ளார்.