தற்பொழுது கொரோனாவின் இரண்டாவது ஆலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தொடர்ந்து பல லட்சம் மக்கள் தொடர்ந்து நாள்தோறும் உயிரிழந்து வருகிறார்கள். இரண்டாவது அலையே இந்த அளவிற்கு ஆட்டிப்படைத்து வரும் நிலையில் மூன்றாவது அலையும் கண்டிப்பாக உருவாகும் என்று மருத்துவர்கள் கூறி உள்ளார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் கொரோனா ஒரு பக்கம் மக்களை ஆட்டிப் படைத்து வர இன்னொரு பக்கம் தினக்கூலிகள் மற்றும் ஏழை போன்றவர்கள் பசியும் பட்டினியும் ஒருபக்கம் அவதிப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவிலேயே அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழ்நாடு தான் முதலிடம் வகிக்கிறது.
இதனால் முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் பலரும் வேலையின்றி தவித்து வருகிறார்கள். தற்பொழுது உள்ள ஏழை மக்களுக்கு ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு அரசு உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதோடு 2000 நிவாரண உதவியும் வழங்கி வருகிறது. ஆனால் ரோட்டோரம் வாழும் மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் பல திரை பிரபலங்களும் தொடர்ந்து தங்களால் முடிந்த அவர்களுக்கு உணவளித்து உதவி வருகிறார்கள்.
அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 4 கலந்துகொண்டு வெற்றியாளராக வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் தான் ஆரி அர்ஜுனன். அவர்தான் தற்பொழுது தெருவோரம் வாசித்து வருபவர்களுக்கு உணவு அளித்து வருகிறார். திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரத்தில் வசித்துவரும் 100 பேருக்கு தனது மாறுவோம் மாற்றுவோம் என்ற அறக்கட்டளை சார்பாக உணவு அளித்து உள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என்று அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.