நயன்தாராவுடன் இணைந்த பிக்பாஸ் கவின்.! வெளியான புதிய படத்தின் போஸ்டர்.

nayanthara-and-kavin
nayanthara-and-kavin

சின்னத்திரையில் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற முக்கியமான வெற்றி  தொடர்களில் அறிமுகமாகி அதன் மூலம் ஓரளவிற்கு ரசிகர்களை தக்க வைத்துள்ளார் நடிகர் கவின். பின்பு வெள்ளித்திரையில் பீட்சா போன்ற படங்களில்  சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தார்.

பின்பு அவர் கதாநாயகனாக ரம்யா நம்பிசனுடன்  இணைந்து  நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மீண்டும் சின்னத்திரையில் பிக் பாஸ் சீசன் 3  நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சு மற்றும் திறமையால் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அவருக்கு பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. பின்பு அண்மையில்  அமேசான் பிறைமில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் லிஸ்ட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் ஒன்றான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்த ரவுடி பிக்சர் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் கவினுக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வழங்கும் இந்த படத்திற்கு ஊர்க்குருவி என தலைப்பு வைக்கப்பட்டது. இந்த படத்தை  அறிமுக இயக்குனர் அருண் என்பவர் இப்படத்தை இயக்குகிறார்.

இயக்குனர் அருண் இதற்கு முன் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து விடமும் மற்றும் நானும் ரவுடிதான்  படத்தை இயக்கிய விக்னேஷ் இவனிடமும் உதவி இயக்குனராக பணியாற்றினார்.  இந்த படம் முழுக்க முழுக்க ஒரு காமெடி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகர் கவினை தவிர இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

ooru kuruvi
ooru kuruvi