சின்னத்திரையில் மக்களின் ஃபேவரட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் வெவ்வேறு துறையில் இருந்தும் வெவ்வேறு இடங்களில் இருந்தும் போட்டியாளர்கள் களம் இறங்குவார்கள். அந்தவகையில் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில் செய்திவாசிப்பாளர் நடன இயக்குனர், நடிகர், நடிகை, பாடகர் என பலரும் கலந்து கொண்டு அந்த சீசனில் இலங்கையிலிருந்து தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தர்ஷன் மற்றும் லாஸ்லியா. தர்ஷன் ஒரு மாடலின் பிரபலம் மற்றும் தமிழில் பல விளம்பர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டவர்.
இவரைத் தொடர்ந்து அந்த சீசனில் கலந்துகொண்ட லாஸ்லியா இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பின்பு தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ் மக்களிடையே பெரிதும் பிரபலம் அடைந்தவர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் தமிழ் மக்கள் பலரையும் கவர்ந்து உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு லாஸ்லியா தமிழில் பல திரைப்படங்களில் கமிட்டாகியுள்ளார். அதில் முதல் படமாக லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் வெளிவந்த பிரண்ட்ஷிப் படம் கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில் அடுத்ததாக லாஸ்லியா தர்ஷன் உடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது.
இந்த கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பிரஸ் மீட் சமீபத்தில் நடந்துள்ளது. அதில் கலந்து கொண்ட லாஸ்லியா தர்ஷனை நண்பன் என கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பலரும் பிக்பாஸ் வீட்டில் தர்ஷனை அண்ணன் என்று கூப்பிட்ட லாஸ்லியா இப்ப நண்பன் எனக் கூறியுள்ளார். இந்த கூகுள் குட்டப்பன் படத்தில் தன் உடன் மிக நெருக்கமாக நடித்ததன் காரணமாகத்தான் இந்த மாற்றம் என ரசிகர்கள் பலரும் யோசித்து வருகின்றனர்.மேலும் ஒரு பக்கம் முதலில் அண்ணன் பின்பு நண்பன் அடுத்த என்னவோ எனவும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.