சமீப காலங்களில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ்,இந்த நிகழ்ச்சி மட்டுமல்ல இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களும் பிரபலமானவர்கள் தான் அப்படி பிரபலமானவராக இல்லை என்றாலும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகின்றனர். அப்படி பிரபலமான ஒருவர் தான் பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்கேற்ற தாமரைச்செல்வி என்பவர் இவருக்கு வயது 32 ஆகும்.
இவர் ஒரு நாடகக் கலைஞர் ஆவார்,இவருக்கு அந்தளவுக்கு ஆங்கிலம் தெரியாது,ஆங்கிலம் தெரியாததால் பிக் பாஸ் சீசன் 5 ல் இவர் பட்ட கஷ்டங்களை எல்லாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு பக்கம் இருந்தாலும் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கியவர்தான் தாமரைச்செல்வி, இதை தொடர்ந்து பிக்பாஸ் தாமரைச்செல்வி பிக்பாஸ் அல்டிமேட் ஷோவிலும் பங்கேற்றார்.
ஆனால் எந்தவித டைட்டிலும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இருந்த தாமரைச்செல்வியை பார்க்க பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் என்பவர் சென்றுள்ளார் மேலும் அங்கு அனிதா அவருடன் எடுத்த பல புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. தற்போது 30 வயதான அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.
அப்பொழுதெல்லாம் செய்தி பார்க்காதவர்கள் கூட இவரை பார்ப்பதற்காக செய்தியை ரசித்து பார்த்து வந்தார்கள், இதன் மூலமே முதலில் அனிதா சம்பத் மிகப்பிரபலமானர் அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவர் தற்போது தாமரைச்செல்வியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது, அப்புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.