சினிமா உலகில் புதுமுக நடிகையின் வரவேற்பு அதிகம் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்களை நன்கு கவர்ந்து விடுகின்றனர் அதனால் அவர்கள் தொடர்ந்து சினிமா உலகில் பயணிக்கின்றனர் அந்த வகையில் நடிகை ஹன்சிகா ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று சூப்பராக இருந்த காரணத்தினால் சினிமா ஆரம்பத்திலேயே ரசிகர்கள் இவருக்கு உருவாக்கத் தொடங்கினார்.
மேலும் ஹன்சிகாவும் தொடர்ந்து டாப் ஹீரோக்களின் படங்களில் கிளாமர் மற்றும் தனது திறமையை காட்டி நடித்ததால் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொண்டார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான விஜய், ஜெயம் ரவி, சூர்யா, தனுஷ், சிம்பு போன்றோருடன் நடித்து அசத்தியுள்ளார் ஹன்சிகா.
இப்படி சினிமாவுலகில் ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு கட்டத்தில் சற்று உடல் எடையை ஏற்றியதால் அவரால் ஒரு சிலர் இறுக்கமான உடைகள் அணிய முடியாமல் போனது. இதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஹன்சிகாவை சமூக வலைதள பக்கத்தில் கிண்டலும் கேலியும் செய்தனர்.
இதை உணர்ந்து கொண்ட ஹன்ஷிகா சினிமாவுக்கு சிறு லீவு விட்டு தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து ஸ்லிம்மான மற்றும் டூ பீஸ் ட்ரெஸ்ஸை போட்டு ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்தார். ஒரு வழியாக மீண்டும் சினிமா உலகில் நடிக்க தொடங்கியுள்ளார் தற்போது ஹன்சிகா கையில் 4 படங்கள் இருக்கின்றன நான்கு படங்களுமே கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக இருந்து வந்துள்ளன.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு அதே போல ஒரு படம் தற்போது கிடைத்துள்ளது அந்த படத்தை இகோர் இயக்கவுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.