வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் – வெளிவந்த முதல் புகைப்படம்.

naai sekar returns
naai sekar returns

80 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை பல திரைப்படங்களில் நகைச்சுவை மன்னனாக நடித்து வந்தவர் வடிவேலு. மேலும் இவர் இருபத்தி மூன்றாம் புலிகேசி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், எலி போன்ற ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வந்தவர் நடிகர் வடிவேலு ஆவார்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வடிவேலுவுக்கும் இயக்குனர் ஷங்கருக்கும் இடையேயான பிரச்சனையால் கொஞ்ச நாட்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். தற்போது அந்த பிரச்சனை எல்லாம் தீர்ந்து சில படங்களில் காமெடியனாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.  இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகின்றன. மேலும் இந்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனிடையே  நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப் படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணன் இணைந்து உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலோ அல்லது புகைப்படமோ படக் குழுவில் இருந்து வெளிவராமல் இருந்த நிலையில் தற்போது ஷிவானி நாராயணன் அவரின் இன்ஸ்டா பக்கத்தில் நடிகர் வடிவேல் உடன் இருக்கும் புகைப்படத்தை..

வெளியிட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறந்த நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடிப்பது மிக்க மகிழ்ச்சி என்பது போல் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி தற்போது இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vadivelu and shivani
vadivelu and shivani