கமல், விஜய்சேதுபதி, பகத்பாசில் போன்ற டாப் நடிகர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பிக்பாஸ் பிரபலம் .! எகிறும் “விக்ரம்” படத்தின் எதிர்பார்ப்பு.?

vikram-movie

big bossதமிழ் சினிமாவில் 80 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வருபவர் உலகநாயகன் கமலஹாசன். சிவாஜிக்கு பிறகு திரையுலகில்  நடிப்புக்கு பெயர் போனவராக இருக்கிறார் உலகநாயகன் கமலஹாசன். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தனது உடல் எடையை மாற்றிகொள்வது மற்றும் தனது பாடி லாங்குவேஜ், நடிப்பையும் மாற்றிக்கொண்டு நடிப்பது கமலுக்கு கைவந்த கலை அதனால்தான் அவருக்கு உலக நாயகன் என்ற அந்தஸ்தை தற்போது மக்கள் கொடுத்துள்ளனர்.

இப்படி வெள்ளித்திரையில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார் கமலஹாசன் திடீரென அரசியல் பிரவேசம் கண்டார் அதில் தனக்கென ஒரு கட்சியை அமைத்துக் கொண்டு தற்போது சிறப்பாக பணியாற்றி கொண்டிருந்தாலும் சினிமா இவரை விடுவதாக இல்லை ஏனென்றால் ஒரு அசாதாரணமான திறமையாளர் எப்பொழுதும் யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமா இப்பொழுதும் அவருக்கு பல்வேறு விதமான பட வாய்ப்புகளைக் கொடுத்து அழகு பார்த்து வருகிறது அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாக கைகோர்த்து விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் ராஜ்கமல் நிறுவனமே தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி போன்ற டாப் நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

ஆனால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க மிகப்பெரிய ஒரு ஆக்ஷன் படமாக இருக்கும் என தெரியவருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இப்படி இருக்கின்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் அவ்வபொழுது இந்த படத்தில் இருந்து சில அப்டேட்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் பகத் பாசிலுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை அண்மையில் வெளியீடு செய்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் சாண்டி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார் சாண்டி மாஸ்டர் தற்போது கமலின் விக்ரம் திரைப்படத்தில் பணியாற்றி உள்ளார். இந்த படத்தில் டான்ஸ் மாஸ்டராக அவர் பணியாற்றி உள்ளதால் மிகுந்த சந்தோஷத்தில் இருப்பதோடு அவரது வாழ்க்கையில் இது ஒரு திருப்புமுனையாக இருக்கும் எனவும் கூறியிருந்தார்.

sandy vikram movie
sandy vikram movie