விஜய் டிவியில் சீசன் சீசனாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சென்ற வாரம் கோலாகலமாக நிறைவு பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கடந்த 4 சீசன்களுக்கு மாறாக 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் ராஜு இந்த சீசனில் முதலிடத்தை பெற்று 50 லட்சம் பரிசை பெற்று சென்றார்.
அவரைத் தொடர்ந்து ரன்னர் அப் பிரியங்கா ஆவார். இந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் தாமரைச்செல்வி. இவர் நாடகத்துறையில் இருந்து வந்தவர் மேலும் இவர் திண்டுக்கல் பக்கம் ஒரு கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவர்.
இவரது இளம் வயதிலேயே குடும்ப வறுமையின் காரணமாக நாடகத்துறையில் சேர்ந்துள்ளார். அந்த துறையில் சிறப்பாக வளர்ந்து வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 5 யில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இவர் ஒன்றும் தெரியாமல் வந்து இருந்தாலும் போகப்போக நிகழ்ச்சி பற்றி புரிந்து கொண்டு சிறப்பாக விளையாடி 100 நாட்களை கடந்து பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்துள்ளார்.
. ரசிகர்கள் பலரும் வந்த சில வரங்களிலே தாமரைச்செல்வி வெளியே சென்று விடுவார் என்ற எண்ணத்தில் உள்ளனர் ஆனால் அதற்கு மாறாக பிக் பாஸ் வீட்டில் தாமரைச்செல்வியின் ஆட்டத்தை பார்த்து பல ரசிகர்கள் வியப்புற்றனர். அதனால் தாமரைச்செல்விக்கு பல ரசிகர்களும் உருவாகின.
இந்த நிலையில் தற்போது தாமரைச்செல்வி மற்றும் பிக்பாஸ் மற்றொரு பிரபலமான ஐக்கி பெர்ரி உடன் இணைந்து சமீபத்தில் வெளியாகி செம வைரலாக வலம் வந்து கொண்டிருக்கும் “ஓ சொல்றியா மாமா” என்ற பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நம்ம பிக்பாஸ் தாமரைச்செல்வியா என வாயடைந்து பார்க்கின்றனர். இதோ அந்த வீடியோ.