பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் அனிதா சம்பத். பின்பு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அனிதா சம்பத்தும் செய்திவாசிப்பாளர் வேலையை நிறுத்தி விட்டு பின்பு பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அனிதா சம்பத் தனது தனித்தன்மையை வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடி இருந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போதும் வெளியே வந்த பிறகும் இவருக்கு பல நெகடிவ் கமெண்டுகள் வந்தவண்ணம் இருந்தன. பின்பு உடனடியாக பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திறமையை நடனத்தில் வெளிப்படுத்தி இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றார் அனிதா சம்பத்.
பின்பு ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் இல் வெளியான பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அதிலும் தன்னை முற்றிலுமாக வெளிப்படுத்தி சிறப்பாக விளையாடினார் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் பாதியிலே எலிமினேஷனில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்பு அனிதா சம்பத் அவரது கணவருடன் இணைந்து யூடியுபில் பல வீடியோகளை வெளியிட்டு வந்தார் இந்த நிலையில் அனிதா சம்பத் மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து புதிய வீடு ஒன்றை கட்டி உள்ளனர். அந்த வீட்டின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
அதனை அடுத்து வீட்டின் கிரகப்பிரவேச நிகழ்ச்சிக்கு பிக்பாஸ் பிரபலங்களும் மனித சம்பத்தின் நண்பர்களும் சிலர் கலந்துகொண்டனர் அதன்படி சுருதி, ரம்யா பாண்டியன் போன்ற சிலரும் அனிதா வீட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.