விஜய்சேதுபதி பட வாய்ப்பை நழுவவிட்ட பிக்பாஸ் ஆரி – எந்த படம் தெரியுமா.?

aari-
aari-

நடிகர் ஆரி தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும் அதில் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றியை ருசித்து உள்ளது இதனால் தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் வருகிறார். சினிமா உலகில் ஓடிக்கொண்டிருந்த நடிகர் ஆரி கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

பிக்பாஸ் எப்படிப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள இதற்குமுன் விளையாண்டா போட்டியாளர்களை சந்தித்து அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு சரியாக களத்தில் இறங்கினார் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரையிலும் ஒரே மாதிரியாக அதாவது நேர்மையாக தனக்கு தெரிந்த தான் செய்தேன் என்பது போல அவர் பயணித்த விதம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்துப் போனது.

அதன் காரணமாக இவர் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றார். வெளியே வந்த அவருக்கு தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பதால் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஒரு சில முக்கிய படங்களை எனது கேரியரில் தவறவிட்டு உள்ளேன் என கூறினார்.

அந்த வகையில் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் முதலில் சீனுராமசாமி அழைத்தது என்னவோ நடிகர் ஆரியை தானாம் ஆனால் அன்றைய தேதியில் ஆரியின் உறவினர்கள் பத்திரிக்கை வைக்க வாந்ததால் சீனு ராமசாமி அவர்களை சரியான நேரத்தில் சந்திக்க முடியாமல் போனதாம் அதன் பிறகு அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு போனதாக கூறினார்.

அதேபோல நான் ரெட்ட சுழி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது உதவி இயக்குனராக சந்திரா பணியாற்றி வந்தார். இவர் கள்ளன் படத்தின் கதையை முதலில் என்னிடம் சொன்னார் ஆனால் நெடுஞ்சாலை படத்தின் கதை போலவே இருப்பதாக சொன்னேன் அவருக்கும் எனக்கும் சண்டை ஏற்படும் அதனால் நாம் இருவரும் இணைந்து பணியாற்றினார் நிச்சயம் சண்டை மட்டும் வரும் என்பது எனக்கு நன்றாக தெரியும் எனக்கு நாபகம் இருந்து உள்ளது என கூறினார். ஒரு சில காரணத்தினால் கள்ளன் படத்தில் நடிக்க முடியாமல் போனதாக கூறினார்.