பிக் பாஸ் ஆரவ் திருமணம் செய்து கொள்ள போறார்.! இவரும் ஒரு நடிகை தான்.

aarav

மீடியா உலகில் எப்பொழுதும் போட்டி இருந்து கொண்டே இருப்பதும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிலும் பெரும்பாலும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைக்கும்  இடையே பெரும் போட்டி நிலவுவது வழக்கம். அப்படி யார் மக்கள் மற்றும் ரசிகர்களை அதிகம் கவர்வது என்ற போட்டி நடந்துக்கொண்டே இருக்கின்றன.

அதனை சரியாக பயன்படுத்தி சின்னத்திரையில் மற்றும் வெள்ளி திரை பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து உண்டு அப்படி  தனது சிறந்த திறமையை யார் வெளிப்படுத்துகிறார்களோ அவர்கள் வெகு விரைவில் அடுத்த கட்டத்தை நோக்கி செல்வது வழக்கம். அப்படி  கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராக தனது திறமையை வெளிப்படுத்தியதன்மூலம் டைட்டில் பட்டத்தை வென்றார் ஆரவ்.

இதனை தொடர்ந்து வெளிவந்த அவருக்கு நல்லதொரு வரவேற்பு கிடைத்ததோடு  மட்டுமில்லாமல் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வாய்ப்பும் கிடைத்தது. அந்த வகையில் இவருக்கு மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தியதன் மூலம் தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிந்த இவர்  திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

raahe
raahe

நடிகர் ஆரவ்,  நடிகை ராஹே  என்பவரை வருகின்ற செப்டம்பர் 6ம் தேதி சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் தெரியவருகிறது. நடிகை ராஹே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ஜோஷ்வா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒருபக்கம்ஆரவ்  ரசிகர்களை மிகப்பெரிய அளவில் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.