விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதல் இடம் பிடிப்பதற்காக பல ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்தவகையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்பட்டது பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களாக ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிக் பாஸ் 6வது சீசன் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறையில் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பிரபலமில்லாத போட்டியாளர்களாக கலந்துகொண்டவர் ராஜு பிரியங்கா இமான் அண்ணாச்சி இவர்களைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைத்தும் முதல் முறையாக ரசிகர்கள் பார்த்தார்கள் பாசம் நேசம் காதல் கவலை சோகம் என அனைத்தும் இருந்தது.
அந்த வகையில் இந்த பிக்பாஸ் 5 வது சீசனில் மிகவும் நட்புடன் இருந்தவர்களில் பாவணி ரெட்டி மற்றும் அபினை இருவரும் மிகவும் நெருக்கமாக பழகினார்கள் அதனால் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கிசுகிசு உருவானது அதன்பிறகு பாவனியை அவர் காதலித்ததாக கூறப்பட்டது.
அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் மற்றும் அக்ஷரா இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் நட்புடன் பழகி வருகிறார்கள் இருவரும் சேர்ந்து அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்தார்கள். அதுமட்டுமில்லாமல் விளம்பர படங்களில் நடிப்பது திரைப்படங்களில் நடிப்பது என மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இருவரும் காதலிப்பது போல் வதந்திகள் எழுந்தது அப்படி இருக்கும் வகையில் தற்போது திடீரென அக்ஷரா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வரும் அவர்களுடன் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இந்த புகைப்படம் மற்றும் வீடியோ விளம்பரப் படத்திற்காக என கூறப்பட்டுள்ளது இருந்தாலும் அக்ஷரா மற்றும் வரும் ஜோடி திருமணக்கோலத்தில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.