சீரியல் நடிகராக தனது பயணத்தை தொடங்கி தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து காணப்படுபவர் ராஜு ஜெயமோகன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், நாம்இருவர்நமக்குஇருவர் போன்ற சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர்.
பின்பு சில காமெடி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் செய்து வந்தார். மேலும் இவர் இயக்குனர் பாக்யராஜ் உடன் துணை இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இப்படி சின்னத்திரையில் ஓரளவிற்கு பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் கவின் நடிப்பில் உருவான நட்புனா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தில் துணைக் நடிகராக நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் இதற்கு பெரிதும் திரைப்படங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தினால் மக்களிடையே ரீச் அடைய இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த வகையில் இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டியாளர்கள் மற்றும் மக்களை என்டர்டைன்மென்ட் செய்துவந்தார்.
மேலும் இவர் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை குவித்த ராஜு இனி சின்னத்திரையில் தொடர்ந்து பயணிக்கப் போவதில்லை என்றும் வெள்ளித்திரை நோக்கி செல்லப் போகிறேன் எனவும் கூறியிருந்தார். அதனை அடுத்து தற்போது இவர் ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் ராஜு ஒரு திரைப்படத்தில் கமிட் ஆக உள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.
மேலும் பொன்ராம் திரைப்படங்கள் அனைத்தும் மக்களை என்டர்டைன்மெண்ட் செய்யும் திரைப்படமாக அமையும் அந்த வகையில் தற்போது பொன்ராம் மற்றும் ராஜு இருவரும் இணைந்து ஒரு சிறப்பான திரைப்படத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் ராஜுவுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். ஆனால் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றும் வெளிவரவில்லை.