அண்மையில் நிறைவுபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்று டைட்டில் வின்னர் என்ற டிராபி மற்றும் ரூ 50 லட்சம் மதிப்புள்ள பரிசு தொகை ஆகியவற்றைப் பெற்றுள்ளார் ராஜு. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியலின் மூலம் அறிமுகமாகி பிரபலமானவர்.
பின்பு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலில் கத்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.மேலும் பிக்பாஸ் ராஜு இயக்குனர் பாக்யராஜ் உடன் துணை இயக்குனராக பணிபுரிந்தார் இவர் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் துணை கதாநாயகனாக நடித்து வந்தவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த ராஜுவுக்கு வெள்ளித்திரையில் பல படங்களில் இயக்குனராகவும் நடிகராகவும் வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
அந்த வகையில் ராஜு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே அவருக்கு மூன்று படங்கள் வெயிட்டிங்கில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வெளியே வந்த ராஜு பிக்பாஸ் வீட்டில் அவரது நெருங்கிய தோழனான இமான் அண்ணாச்சியை சந்தித்து கேக் வெட்டி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
இதனையடுத்து தற்போது ராஜு ரசிகர்களிடையே ஒரு பேட்டி ஒன்றில் தளபதி விஜய் பற்றி கூறியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு ஒரு 15 நாட்களுக்கு முன்பே பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார். மேலும் அங்கு விஜய் சூட்டிங் ஸ்பாட்டிற்கு புதுசாக யாராவது வந்தால் கண்டுபிடித்துவிடுவாராம்.
அந்த வகையில் ராஜுவை பார்த்து நீங்கள் புதுசா என கேட்டு உள்ளாராம். ஆம் நான் நெல்சன் உடன் வேலை செய்துள்ளேன் என கூறினேன். பின்பு கொஞ்ச நேரம் விஜய் என்னுடன் பேசி வந்தார் அப்போது அவர் எனது கண்கள் அழகாக இருக்கிறது என்றும் கூறினார் பின்பு நான் விஜய்க்காக சின்ன வயதிலிருந்தே சேர்த்து வைத்திருந்த புத்தகத்தை காட்டினேன் அவரும் அதை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ஆட்டோகிராப் செய்து கொடுத்தார் என ராஜு மகிழ்ச்சியாக கூறினார்.