பிக் பாஸ் 5 -வீட்டில் இந்த ஆறு பேர் கன்பார்மாக விளையாட போறாங்க.. அந்த பிரபலங்கள் யார் தெரியுமா.?

big-boss 5
big-boss 5

வெள்ளிதிரையே கதியென என கடந்த மக்கள் மற்றும் ரசிகர்களை சின்னத்திரை தொலைகாட்சி பல்வேறு விதமான புதிய நிகழ்ச்சி மற்றும் சீரியல்களை கொடுத்து தன் பக்கம் திருப்பி வருகிறது.

குறிப்பாக விஜய் டிவி அடுத்தடுத்த புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்து ரசிகர்கள் மற்றும் மக்களின் கவனத்தை வெகுவாக கவர்கின்றன. அந்தவகையில் பிக்பாஸ் என்னும் புதிய நிகழ்ச்சியை கமல்ஹாசனை வைத்து துவங்கியது இது தற்போது சீசன் சீசனாக வெற்றி நடை கண்டு வருகிறது அந்த வகையில்  பிக்பாஸ் ஐந்தாவது சீசனை எதிர்நோக்கி மக்கள் பெருமளவு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஐந்தாவது சீசனை கமல்ஹாசன் தற்போது தொகுத்து வழங்க இருக்கிறார்.  தற்போது 5வது சீசன் தொடங்கப்பட உள்ளது அதற்கு முன்பாக இதன் லோகோ மற்றும் ப்ரோமோ ஆகியவை வெளியாகி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.

ரசிகர் மனதில் பிக்பாஸ் வீட்டில் எத்தனை பேர் கன்ஃபார்மா கலந்து உள்ளனர் என்பது கேள்விக்குறியாக இருந்து வந்த நிலையில் 90% சதவீதம் உறுதி செய்யப்பட்ட ஆறு பிரபலங்களின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது.

ஷகிலா மகள் மிலா, நடிகர் சந்தோஷ் பிரதாப், சீரியல் நடிகை பவானி ரெட்டி, கோபிநாத் ரவி, சூசன் ஜார்ஜ், ப்ரதாயினி போன்ற பிரபலங்கள் கன்ஃபார்மாக  பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.