விஜய் டிவியில் ஒளிபரப்படும் “star music” நிகழ்ச்சிக்கு விசிட் அடித்த பிக்பாஸ் 5 போட்டியாளர் – யார் யார் தெரியுமா.? வெளிவந்த புகைப்படம்.

bigboss-5
bigboss-5

சின்னத்திரை  நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகள் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான். அந்த வகையில் பிரம்மாண்ட பொருட்செலவில் நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சீசன் சீசனாக நடந்து வருகின்றன.

மேலும் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கூட அண்மையில்தான் நிறைவு பெற்றது. ஒவ்வொரு சீசனிலும்  வெவ்வேறு துறையில் இருந்து போட்டியாளர்கள் களம் இறங்குவார்கள். அந்த வகையில் அனைத்து சீசன்களிலுமே விஜய் டிவி பிரபலங்களும் சிலர் கலந்து கொள்வார்கள்.

இதனிடையே தற்போது ஒளிபரப்பாகி நிறைவடைந்த பிக் பாஸ் 5 வது சீசனில் விஜய் டிவி பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர் அதில் முக்கிய ஒருவராக பார்க்கப்படுவது பிரியங்கா. மேலும் இவர் கடந்த சில வருடங்களாகவே விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக பயணித்து வருகிறார்.அந்த வகையில் இவர் ஸ்டார்ட் மியூசிக் என்ற கேம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர்.

மேலும் இவர் முதல் மற்றும் இரண்டாவது என இரண்டையுமே பிரியங்கா தனியாக தொகுத்து வழங்கி வந்தவர் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் பிரியங்கா பிக்பாஸ் வீட்டில் இருந்ததால் பிரியங்காவிற்கு பதில் மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில்  பிக்பாஸ் நிகழ்ச்சி  முடிவடைந்ததால் பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் சிலர் தற்போது ஸ்டார் மியூசிக் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையதளத்தில் உலா வருகிறது. அதில் பிரியங்காவும் உள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிகழ்ச்சிக்கு அவரே கன்டஸ்டன்ட் ஆக  வந்துள்ளார். அப்ப நிகழ்ச்சி சூப்பராக இருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

priyanka
priyanka