சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பொழுதுபோக்கிற்காக பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதில் மக்களின் ஃபேவரட் நிகழ்ச்சி என்றால் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி சீசன் சீசனாக நடந்து வருகிறது இந்த நிலையில் தற்போது 5வது சீசன் நடைபெற்று இறுதி கட்டத்தை நோக்கி சென்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டவர் அக்ஷரா ரெட்டி. இவர் மாடலிங் துறையில் இருந்து வந்தவர். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வில்லா டு வில்லேஜ் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் சிறப்பாக விளையாடி இருந்தாலும் சில போட்டியாளர்கள் இடம் அப்பப்போ கடுமையாக சண்டை போட்டு பிறகு அவரே சமாதானம் ஆகுவார். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் வீட்டில் 80 நாட்களை கடந்து பயணித்து வந்த இவர் ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் எலிமினேசனில் இருந்து வெளியேறினார். மேலும் பிக் பாஸ் வீட்டில் இவருக்கு நெருங்கிய நண்பன் வருண்.
அக்ஷராவிற்கு மற்ற போட்டியாளர்கள் இடம் எந்த சண்டை இருந்தாலும் வருணிடம் மட்டும் அவர் எந்த விதமான சண்டையும் போடவில்லை அந்த அளவிற்கு இவர்களது கருத்து ஒத்துபோகின. இந்த நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து எலிமினேஷனில் இருந்து ஒரே நாளில் வெளியேறினர். மேலும் அக்ஷரா வெளியேறிய பின் இதற்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பல பிரபலங்களை சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அக்ஷரா மற்றும் வருண் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது இவர்கள் இருவரும் இணைந்து வெள்ளித்திரையில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அதனை ஒரு பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை