பல நடிகைகளும் நிறைய திரைப்படங்களில் நடித்தால் மட்டுமே தற்போது மக்களிடையே புகழ் பெற்று விளங்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டு விட்டது ஆனால் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகளும் பல படங்களை கைப்பற்றி நடித்து வருகிறார்கள் அந்த வகையில் வலம் வருபவர் தான் பூமிகா.
இவர் பத்ரி,சில்லுனு ஒரு காதல் போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களை அதிகம் கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படம் வெளியானபோது மக்களிடையே இவர் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
ஆம் இந்த திரைப்படத்தில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒன்னுமே தெரியாத கல்லூரி மாணவி போல் இருப்பார் ஆனால் அதன் பிறகு வெளிநாடு சென்று அங்கு படித்து முடித்துவிட்டு மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும் பொழுது இவரது நடிப்பு மக்களை அதிகம் கவர்ந்து விட்டது என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு ஒரு வில்லி போல் நடித்து இருப்பார்.
இதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கிலும் நிறைய ஹிட் படங்களை கொடுத்து உள்ளார் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தோனியின் அக்கா வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டார் என்றுதான் கூற வேண்டும் இதை தொடர்ந்து இவர் சமீப காலமாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போதும் இவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது ஆம் தனது 43வது பிறந்தநாளை இவர் தனது மகன்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கோலாகலமாகக் கொண்டாடிய போது எடுத்த சில புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.